நீயெல்லாம் பிக்பாஸ்-க்கு லாயக்கே இல்லை: மைனாவிடம் கூறியது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:27 IST)
நீ எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு லாயக்கே இல்லை என்றும் உனக்கு பிக்பாஸ் விளையாட்டை விளையாட தெரியவில்லை என்றும் மைனாவின் கணவர் யோகி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் வாரமாக உள்ளது. முதல் நபராக மைனாவின் கணவர் யோகி மற்றும் அவரது குழந்தை வருகின்றனர்
 
இந்த நிலையில் மைனாவிடம் தனியாக பேசும் யோகி, ‘நீ எல்லாம் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு லாயக்கே இல்லை என்றும் நீ சரியாக விளையாடவில்லை என்றும் கூறுகிறார் 
 
மேலும் ஒரு தவறு நடந்தால் அதை தட்டி கேட்க வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்றும் ஆனால் நீ தட்டிக்கேட்கவில்லை என்றும் ஒதுங்கி போகிறாய் என்று மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள் என்றும் கூறுகிறார். இதனை அடுத்து தன் தவறை திருத்திக் கொள்வதாக தனது கணவரிடம் கூறுகிறார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்