யோகி பாபு படத்தின் தலைப்புக்கு வந்த பிரச்சனை…. அதையே பப்ளிசிட்டியாக மாற்றிய படக்குழு!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:01 IST)
யோகி பாபு நடிப்பில் வீரப்பன் கஜானா என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். நகைச்சுவை நாயகனாகவும் சில படங்களில் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அதையடுத்து இப்போது வீரப்பன் கஜானா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார். அந்த படத்தின் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புக்கு வீரப்பன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, இப்போது பெயரை மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வீரப்பன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் படத்தை மாற்ற உள்ளதாக பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி குறிப்பையும் வெளியிட்டுள்ள படக்குழு படத்துக்கு பப்ளிசிட்டியும் தேடிக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்