ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரன்தீவ் ஆஸியில் பேருந்து ஓட்டுனராக இப்போது பணிபுரிந்து வருகிறார்.

இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளுக்காக 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரன்தீவ். இவர் சேவாக்குக்கு ஒரு நோ பால் போட்டு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் இப்போது ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார். வருவாய் ஈட்டும் நோக்கில் அவர் இந்த வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார்.

36 வயதான ரன்தீவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 டி 20 போட்டிகள் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்