வயதானவர்களுடன் மோதுகிறாரா சூர்யா?

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (10:44 IST)
சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில், வயதானவர்களுடன் மோதுவதாக கூறப்படுகிறது.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கிறார். ‘நானும் ரெளடிதான்’ படத்தில், பார்த்திபன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் என மூத்த நடிகர்களை முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வைத்தார்.
 
அதேபோல் இந்தப் படத்திலும் செந்தில், சுரேஷ் மேனன், மன்சூர் அலிகான் என மூத்த நடிகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், கார்த்திக்கும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இன்னும் 10 நாட்களே ஷூட்டிங் பாக்கி இருக்கும் நிலையில், ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் கார்த்திக். ‘அனேகன்’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த கார்த்திக், இந்தப் படத்தில் சூர்யாவுடன் மோதலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்