விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? வெளியான தகவல்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:40 IST)
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முதல்நாளில் அதிக வசூல் செய்த படம் விக்ரம்தான் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் வசூல் ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்