மனோஜ், கடந்த 25ஆம் தே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்த, 26ஆம் தேதி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில், தனது நண்பர் பாரதிராஜாவின் மகன் ஆத்மா சாந்திக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியுள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். இதன்மூலம், மனோஜ் ஆத்மா அமைதி பெறும் என நம்பப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடியின் தாயார், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் மறைந்தபோது, அவர்களுக்கும் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோட்ச தீபம் என்பது, மறைந்தவர்களின் ஆன்மா சாந்தி பெற வேண்டி ஏற்றப்படும் பாரம்பரிய மதச்சடங்காகும். முக்கிய ஆலயங்கள், ஆசிரமங்கள், புனித நதிக்கரைகள் போன்ற இடங்களில் இந்த சடங்கு நடைபெறுவது வழக்கமாகும்.