விக்ரம் சக்சஸ் மீட்: கமலுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி!

வெள்ளி, 3 ஜூன் 2022 (19:28 IST)
விக்ரம் சக்சஸ் மீட்: கமலுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி!
கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டுள்ளது
 
இந்த படம் வெற்றி உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’  திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல் சாரை நேரில் சந்தித்து 
ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் ‘விக்ரம்’ நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்