விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் நேற்று ரிலீஸாக இருந்த நிலையில் படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.
ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்தது. அதன் பின்னர் வழக்கு நடந்து மாலைக் காட்சியில் இருந்துதான் படம் ரிலீஸானது.