ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தி படங்கள் தென்னிந்தியாவில் பெரிதாக ஓடாதது குறித்துத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “ரஜினிகாந்த் சார், சிரஞ்சீவி சார், சூர்யா மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களை நாங்கள் இங்கு பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அவர்கள் ரசிகர்களிடம் எங்கள் படங்களைப் பார்க்க சொல்வது இல்லை. தென்னிந்தியாவுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை ரசிகர்கள் பாய் பாய் என அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு சென்று என் படத்தைப் பார்க்க மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.