“காத்திருக்க முடியல…” ‘கைதி’ ஹீரோ கார்த்தி விக்ரம் பத்தி போட்ட டிவீட்

வெள்ளி, 3 ஜூன் 2022 (17:32 IST)
நடிகர் கார்த்தி விக்ரம் திரைப்பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்று காலை இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாட்கள் கனவு நிறைவேற உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், விக்ரம் பார்க்கும் முன்னர் கைதியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுமாறு கூறியிருந்தார்.

இந்நிலையில் படம் ரிலீஸாகிவிட்ட கிட்டதட்ட கைதி 2 என்று சொல்லுமளவுக்கே இரண்டு படங்களுக்கும் அதிகளவில் ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் விக்ரம் படம் பற்றிய டிவீட் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “கமல் சாரை ஆக்‌ஷன் அவதாரில் பார்க்க காத்திருக்க முடியவில்லை. படம் பற்றி நல்ல கருத்துகளை கேட்டுவருகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இயக்குனர் லோகேஷ்க்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்