விஜய்யின் வாரிசு படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:42 IST)
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் வெளியீடு ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவைக் கண்டு களித்தனர்.

இதையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாதி 1மணிநேரம் 25 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 27 நிமிடமும் ஓடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்