சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

Prasanth Karthick

ஞாயிறு, 30 மார்ச் 2025 (14:33 IST)

மோகன்லால் நடித்து வெளியான எம்புரான் படத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான படம் எம்புரான். இந்த படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள சினிமாவிலேயே பெரும் பட்ஜெட்டில் உருவான இந்த படம் பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் இந்த படத்தில் குஜராத் வன்முறை சம்பவங்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்துத்வா கட்சியாக வில்லனை சித்தரித்திருப்பதற்கு பாஜக, ஆர் எஸ் எஸ் தலைவர்கள் படத்தை கடுமையாக கண்டித்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. படத்தில் 17 காட்சிகளை நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் “கலைப் படைப்பை, கலைஞர்களை அழிக்க முயற்சிப்பது ஜனநாயக உரிமையை மீறும் செயல். ஜனநாயக சமூகத்தில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்