கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

Prasanth Karthick

ஞாயிறு, 30 மார்ச் 2025 (10:12 IST)

ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியை கிண்டல் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பிரபல நடிகை கண்டித்துள்ளார்.

 

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன. இதில் ஆர்சிபி அணி வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து நேற்று சமூக வலைதளங்களில் ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்கள் இடையே வார்த்தை மோதல் எழுந்தது.

 

இதில் சிஎஸ்கே ரசிகர்கள் பலர் விராட் கோலியை கிண்டல் செய்து பலவாறாக பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து நடிகை வர்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஒரு வீரரை புகழ்வதற்காக இன்னொருவரை நாம் அவமதிக்கக் கூடாது. நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை அவமானம் செய்யக் கூடாது. அவர்கள் மென் இன் ப்ளூ என்பதை மறந்துவிட வேண்டாம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்