கட்சியின் முதல் மாநாட்டில் 2 மணிநேரம் பேச திட்டமிட்டுள்ள விஜய்?

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (14:10 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் இன்னும் விறுவிறுப்பாக கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொல்வது, பண்டிகை நாட்களுக்கு மக்களுக்கு வாழ்த்துச் செய்திகள் வெளியிடுவது என சமூகவலைதள அரசியலே இதுவரை செய்து வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக விக்கிரவாண்டியில் மாநாடு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன. இதில் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் விஜய் சுமார் 2 மணிநேரம் அளவுக்குப் பேசவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கானப் பேச்சை அவர் தயார் செய்துகொண்டு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்