சுகாதாரத்துறை அமைச்சர் மட்டும் வேகமாக நடந்தால் போதாது அந்தத் துறையும் வேகமாக நடக்க வேண்டும்- முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர்....

J.Durai

செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:44 IST)
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 53 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டமானது மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது.... 
 
தற்போதைய திமுக ஆட்சியில் புகார் துறையின் அவலம் மட்டுமில்லாது அனைத்து அவலங்கள் குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மட்டும் வேகமாக நடந்தால் போதாது என்றும் அந்த துறையும் வேகமாக நடக்க வேண்டும் என்றும் அதிமுக ஆட்சியில் மருத்துவமனைகளில் செயல்படக்கூடிய இருதய நோய் பிரிவில் மருத்துவர்கள் பணியில் இருந்தார்கள் என்றும் தற்சமயம் இந்த ஆட்சியில் இருதய நோய் பிரிவில் மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை என்பதும் பொதுமக்கள் வாயிலாக தெரிய வருகிறது.
 
இது வேதனை அளிக்கிறது இந்த அரசு மக்களை தேடி மருத்துவம் என விளம்பரப்படுத்தும் நிலையில் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களுக்கு கோரிக்கை என்றும் தெரிவித்தார்.
 
மேலும் செய்தியாளர்கள் ஆளுநர் மாற்றம் குறித்த கேள்வி எழுப்புகையில்:
 
அதற்கு பதில் தர மறுத்துவிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்