தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (11:35 IST)
தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த கூட்டம்' சிறப்பாக உருவாகுவதற்கு முக்கியமான காரணம் என்றும், நான் `ஸ்பெஷல் 26' படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின்  முக்கியமான கருவை மட்டும் எடுத்து, புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். 
 
நான் சூர்யா நடித்த `காக்க காக்க' போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி  சூர்யா. கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல் ஹாசன் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர்.  இவரை பொம்பள கமல்ஹாசன் என்று கூறலாம். அதேபோல் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை ஒரு ஆம்பள மனோரமா என்று கூறலாம். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் என்று  கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்