லாபட்டா லேடிஸ் ஒரு பொழுதுபோக்கு படம்…அதுக்குப் பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம்… இயக்குனர் வசந்தபாலன் கருத்து!

vinoth
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:01 IST)
உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு பல விருதுகள் அளிக்கப்பட்டாலும், ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருது திரைத்துறையில் மிக உயரியதாக கருதப்படுகிறது.  ஆனால் இது அமெரிக்க படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில்தான் மற்ற நாட்டு படங்கள் கலந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் கொட்டுக்காளி, வாழை மற்றும் தங்கலான் போன்ற படங்கள் இருந்த நிலையில் அவை தேர்வு செய்யப்படாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “லாபட்டா லேடீஸ் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்துக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம். ஆனால் அதைவிட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடுஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்