ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு இப்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் மோகன் லாலின் 64 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எம்பூரான் திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதையடுத்து விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
எம்பூரான் திரைப்படத்தின் ரிலீஸ் மார்ச் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மஞ்சுவாரியர், பிருத்விராஜ் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.