அஜித் நடித்த "விடாமுயற்சி" படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ஆங்கில டீசரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இந்த படம் ஆங்கிலத்திலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "விடாமுயற்சி". இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், இறுதியாக ஒரு வார படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளது. இந்த படப்பிடிப்பு டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், "விடாமுயற்சி" திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்தின் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், "விடாமுயற்சி" படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, சில நிமிடங்களுக்கு முன்பு, படத்தின் ஆங்கில டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது, இது தரமான செயல் எனப் பாராட்டப்படுகிறது. இதனை அடுத்து, இந்த படம் தமிழ் உள்பட சில இந்திய மொழிகளில் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே, இந்த படம் ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்று கூறப்பட்ட நிலையில், அது ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.