துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:49 IST)
சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அஜித் படங்களிலேயே மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

இந்த படம் ரிலீஸாகி இப்போது 20 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தோடு ரிலீஸான வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்