என்ன தமிழ் சினிமாவுக்கே வர ஐடியா இல்ல போல… மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை இயக்கும் மோகன் ராஜா!

புதன், 1 பிப்ரவரி 2023 (09:16 IST)
இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய காட்பாதர் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்றது.

'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். அங்கு சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் படத்தை இயக்கினார். அதையடுத்து இப்போது மீண்டும் தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்