சூப்பர் ஹிட் ஆகியும் தங்கலான் படத்துக்கு சேட்டிலைட் பிஸ்னஸ் முடியவில்லையா?... பின்னணி என்ன?

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2024 (09:21 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பேசிய இயக்குனர் பா ரஞ்சித் “தங்கலான் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமாக இருந்தது. ஆனால் நாங்கள் வணிகக் காரணங்களுக்காக நேரத்தைக் குறைத்தோம்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். சமீபகாலமாக முன்னணி தொலைக்காட்சிகள் எந்த படத்தையும் புதிதாக வாங்குவதில்லை என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் ஓடிடிகளின் வரவால் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு நடுவே திரைப்படங்களைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தொலைக்காட்சிகளில் படங்கள் ஒளிபரப்பாகும் போது அதன் டி ஆர் பி முன்பு போல இல்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்