சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீஸாகி சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
எமர்ஜென்ஸி படத்துக்கு இப்போது வரை சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லையாம். அதற்குக் காரணம் படத்தில் சீக்கியர்கள் குறித்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளதால் அதை நீக்கிவிட சொல்லி சென்சார் உறுப்பினர்கள் சொல்லியும், அதை கேட்க மறுத்த கங்கனா ஏற்க மறுத்ததால் சான்றிதழ் வழங்கப்படவில்லையாம். அதனால் இந்த வாரம் ரிலீஸாக இருந்த எமர்ஜென்ஸி திரைப்படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.