மை லட்டூஸ்... முதன்முறையாக ஸ்னேகா வெளியிட்ட சூப்பர் கியூட் போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (12:03 IST)
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.


இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதைடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.


இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடடும் தனது கணவர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறியதுடன் முன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  அதற்கு பிரசன்னா "  நன்றி கண்ணம்மா " என்று பாசமாக ரிப்ளை செய்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday to my soul mate my lover boy my guardian angel

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்