பெற்றோர்களின் திருமண நாளை கேக்வெட்டி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:38 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் . விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.


இந்நிலையில் தற்ப்போது தனது பெற்றோர்களின் திருமண நாளை கீர்த்தி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் ச சமுகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் திரைப்பட தயாரிப்பாளர். அவரது தாய் மேனகா சுரேஷ் குமார் தமிழ் , தெலுங்கு கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்து 80ஸ் காலத்தில் சிறந்து விளங்கியவர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்