வசூல்ராஜா பட வாய்ப்பை தவறவிட்ட நடிகை – பின்பு சினேகாவிடம் சொன்ன வார்த்தை!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:36 IST)
வசூல்ராஜா எம் பி பி எஸ் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவைதான் அணுகியதாக இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.

கமல், சினேகா, பிரகாஷ்ராஜ் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வசூல்ரஜா எம்பிபிஎஸ். இந்த படம் இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் சரண், ’முதலில் சினேகா நடித்த கதாபாத்திரத்துக்காக ஜோதிகாவைதான் அணுகினோம். ஆனால் அவர் மிகவும் பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் படம் ரிலீஸானதும் சினேகாவிடம் நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்