முன்னணி இயக்குனரை அழைத்துக் கதைக் கேட்கும் சிம்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (16:48 IST)
நடிகர் சிம்பு இப்போது பல திறமையான இயக்குனர்களிடம் கதைக் கேட்கும் முயற்சியில் இருக்கிறாராம்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்த படத்தின் வெற்றியை அப்படியே பற்றிக்கொண்டு மேலும் மேலும் சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சிம்பு. இந்நிலையில் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொஙகராவை அழைத்து கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டுள்ளாராம். விரைவில் இருவரின் சந்திப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்