சிம்புவின் மாநாடு: தெலுங்கை அடுத்து இந்தி ரீமேக்கிற்கும் கடும் போட்டி!

புதன், 1 டிசம்பர் 2021 (12:18 IST)
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் இதுவரை சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கு பதில் தெலுங்கு ரீமேக்கான உரிமையை கொடுக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்ததாக கூறப்படுகிறது
 
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் ரீமேக்கை வாங்க போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெலுங்கு மட்டுமின்றி மாநாடு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையையும் பெற பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாகவும் குறிப்பாக ஒரு முன்னணி தயாரிப்பாளர் மிகப்பெரிய தொகையை இந்த படத்தின் இந்தி ரீமேக்கிற்கு வழங்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
விரைவில் மாநாடு தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமை குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்