தள்ளிப் போகாதேன்னு பேரு வச்சாலும் வச்சாங்க… தள்ளி போய்கிட்டே இருக்கு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (16:45 IST)
அதர்வா நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கியுள்ள தள்ளிப் போகாதே திரைப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே.  அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரேமம் பட புகழ் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ரொமான்டிக் காதலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படம் சில ரிலிஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அக்டோபர் 14 ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 3 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் இப்போது வரை படத்தின் வியாபாரம் நடக்காத்தால் மீண்டும் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தள்ளிப் போகாதே திரைப்படம் தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்