இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்னும் 25 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் ராம் சிம்புவை வைத்து ஒரு படத்தை உடனடியாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சுரேஷ் காமாட்சியே தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது. சிம்பு தனது படங்களை முடித்துவிட்டு அடுத்து இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.