வட இந்தியாவிலும் கல்லா கட்டும் மாநாடு… போன் போட்டு பாராட்டிய பாலிவுட் இயக்குனர்!

புதன், 1 டிசம்பர் 2021 (16:14 IST)
மாநாடு திரைப்படம் வட இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி வட இந்தியாவிலும் பிரதிபலித்துள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் வட இந்தியாவிலும் ரிலீஸான இந்த படம் வசூலில் சோடை போகவில்லையாம். படத்தின் பரபரப்பு பற்றி கேள்விப்பட்ட தற்போதைய பாலிவுட் இயக்குனரான அட்லி மும்பையில் திரையரங்கில் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை அழைத்து பாராட்டித் தள்ளியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்