பார்ட்டி படத்துக்கு ஓடிடியில் உருவாகும் டிமாண்ட்!

புதன், 1 டிசம்பர் 2021 (10:29 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் பல நடிகர்கள் நடித்த பார்ட்டி படம் சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் உள்ள திரைப்படம் பார்ட்டி. வெங்கட்பிரபுவின் குழுவைச் சேர்ந்த அனைவரும் நடித்திருக்கும் அந்த திரைப்படம் முழுக்க முழுக்க பீஜிங் தீவில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது மாநாடு ரிலிஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிட ஓடிடி பிளாட்பார்ம்கள் ஆர்வம் காட்டுகின்றனவாம். ஆனால் தயாரிப்பு தரப்பில் திரையரங்க விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை அதில் பேரம் படியாத பட்சத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் உள்ளார்களாம். ஆனால் திரையரங்கிலோ அல்லது ஓடிடியிலோ விரைவில் படம் ரிலீஸ் ஆகி விடும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்