போதை ஊசி போட்டுக்கொண்டுதான் நடிப்பாராம்.. கவர்ச்சி நடிகை பற்றி வெளியான ரகசியம்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:40 IST)
நடிகை சில்க் ஸ்மிதா படங்களில் நடிக்கும் போது போதை ஊசி போட்டுக்கொண்டுதான் நடிப்பாராம்.

தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை தமிழ் திரைப்படமாக எடுக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது சில்க் ஸ்மிதா பற்றி தெரியாத ரகசியங்கள் வெளியாகியுள்ளன. டாக்டர் ஒருவரின் ஆதிக்கத்தில் இருந்த சில்க் ஸ்மிதா ஒரு கட்டத்தில் போதை ஊசிகளின் துணையோடுதான் படங்களில் நடிக்கவே செல்வாராம். அதுமட்டுமில்லாமல் பல்வேறு போதை பழக்கங்களுக்கும் அவர் அடிமையாக இருந்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்