’மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ அடுத்தடுத்த 2 படங்கள் ரிலீஸ்.. விஜய் ஆண்டனி மாஸ் பிளான்..!

Siva

வியாழன், 27 ஜூன் 2024 (21:59 IST)
விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் க்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ஹிட்லர் படத்தின் ரிலீஸ் தகவலையும் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் டிரைலர் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அனேகமாக ஜூலை மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த இன்னொரு திரைப்படமான ஹிட்லர் என்ற படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஜூலை, ஆகஸ்ட் என அடுத்தடுத்து இரண்டு மாதங்களில் விஜய் ஆண்டனி இரண்டு படங்களை வெளியிட  உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்