அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!

Siva

வியாழன், 27 ஜூன் 2024 (20:10 IST)
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து முடித்துவிட்டு குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புக்கு விரைவில் வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குட் பேட் அக்லி’ படத்தின் முதல் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் சற்றுமுன் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது

இந்த போஸ்டரில் அஜித் அட்டகாசமான போஸ் கொடுத்து குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது போல் இருக்கும் நிலையில் இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படம் ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்