வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸா? பரபரப்பு தகவல்..!

Siva

வியாழன், 27 ஜூன் 2024 (20:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே தேதியில் தான் சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த படத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதே தேதியில் தான் சூர்யாவின் கங்குவா படமும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
கங்குவா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் தான் ரஜினி படத்துடன் தைரியமாக மோத படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்