திருமணமான சில மாதங்களில் நல்ல செய்தி சொன்ன இந்திரஜா ரோபோ சங்கர்.. ரசிகர்கள் வாழ்த்து..!

Siva

வியாழன், 27 ஜூன் 2024 (21:57 IST)
பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணமான நிலையில் சற்றுமுன் அவர் ஒரு நல்ல செய்தியை சொன்னதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார். அவருடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்திராஜாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகி உள்ள நிலையில் அவர் விஜய் டிவியில் ஆரம்பமாக உள்ள மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கணவரோடு கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இந்த இந்திராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கும் அவருடைய கணவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் புகழ் தனது மனைவியுடன் கலந்து கொள்ள விரும்புகிறார் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்திரஜாவும் கலந்து கொள்ள இருப்பதை எடுத்து இந்த நிகழ்ச்சிக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்