சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..!

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (21:45 IST)
சூர்யா நடித்த ‘கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த படம் ஏற்கனவே அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தகவல் கசிந்த நிலையில் சற்றுமுன் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10ஆம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
அக்டோபர் 10ஆம் தேதி என்பது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்ட நீண்ட விடுமுறை தினம் என்பதால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அதே தேதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதால் திரையரங்குகள் எவ்வாறு பிரித்து வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
வேட்டையன்,  ‘கங்குவா’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டு படமும் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Ediited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்