ரொமான்ஸ் வருமான்னு கேட்டார் மணிரத்னம்.. அதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு- புலம்பிய நடிகர்!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (08:19 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ளார் சரத்குமார். அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 இசை விழாவில் பேசிய சரத்குமார், “நான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்தவன். ஆனால் ஷூட்டிங்கின் போது மணிரத்னம் எனக்கு ரொமான்ஸ் வருமா என்று கேட்டார். அதுதான் ரொம்ப கஷ்டமா இருந்தது.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்