ரஜினி ஆப்செண்ட்… கமல் ப்ரசண்ட்… பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அப்டேட்!

செவ்வாய், 28 மார்ச் 2023 (15:56 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ள நிலையில் விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்துகொண்டு பேசியது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்