’டிக்கிலோனா’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (18:23 IST)
சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’ படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது 
 
சந்தானம் மூன்று வேடத்தில் நடித்த ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தினால் திரையரங்குகள் திறக்கவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
சந்தானம் ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்