ஓடிடியில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (13:51 IST)
நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் முன்னதாக வெளியாகி படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்