ரஜினியின் கடைசி படம் லோகேஷ் உடனா?... கோலிவுட்டில் பரவும் தகவல்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (16:01 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.

தான் இயக்கிய நான்கு படங்களும் ஹிட் என்பதால் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க பல மொழி நடிகர்களும் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் அடுத்து கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷை அணுகி, இணைந்து ஒரு படத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம்தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்