பிருத்வி ஷா காதலியோடு இருக்கும் புகைப்படத்தை வைத்து சேட்டை செய்த நெட்டிசன்ஸ்!
புதன், 15 பிப்ரவரி 2023 (08:18 IST)
இந்திய அணிக்காக மிகச்சிறந்த அறிமுகம் பிருத்வி ஷாவுக்குக் கிடைத்தாலும், அவரால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா அணியில் இடம் கிடைக்காதது விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
அதை முன்னிட்டு சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பாபா புகைப்படத்தை பதிவிட்டு “நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அவரும் நடிகை நித்தி தபாடியும் நெருக்கமாக இருக்கும் விதமாக ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது. இதையடுத்து இது சம்மந்தமாக பதிவிட்ட பிருத்வி ஷா “சிலர் என்னுடைய புகைப்படத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.” எனக் கூறி இருந்தார்.
பிருத்வி ஷா மற்றும் நித்தி ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் பிரிந்துவிட்டதாகவும் கிசுகிசுக்களும் உலா வருகின்றன.