விஜய்யுடன் கண்டிப்பாக மீண்டும் ஒரு படம் பண்ணுவேன்… ஜெயிலர் மேடையில் நெல்சன் !

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (07:52 IST)
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை  பீஸ்ட் படத்தில் இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பீஸ்ட் படத்தின் தோல்வியால் அடுத்து அவர் ரஜினி படத்தில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. அதை இப்போது ஜெயிலர் மேடையில் ரஜினிகாந்த் பேசும் போது “விநியோகஸ்தர்கள் நெல்சனை மாற்ற சொன்னார்கள்” என உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் நிகழ்ச்சியின் போது பேசிய நெல்சன் “மீண்டும் விஜய் சாருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன்” எனக் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்