கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.
இதையடுத்து இப்போது அவர் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராப் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிவராஜ்குமார் பற்றி பேசிய நெல்சன் அவரின் தம்பி மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் பற்றியும் பேசினார். அப்போது “என்னுடைய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களைப் பார்த்துவிட்டு புனீத் ராஜ்குமார் போன் செய்து பேசினார். உங்கள் இயக்கத்தில் 5 நிமிடம் வரை வரும் கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுங்கள் என பெருந்தன்மையாக பேசினார்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.