சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி இருக்கிறது… சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பேச்சு!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (07:46 IST)
நடிகர் ரஜினிகாந்துக்கு சமீபகாலமாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை. அதனால் அவர் அடுத்து கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் “ரஜினி  சாருக்கு போட்டி இருக்கிறது. அவருக்கு போட்டி அவரேதான். இந்த வயதிலும் அவர் சூப்பர் ஸ்டாராகதான் இருக்கிறார். தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அவர் சூப்பர் ஸ்டார்தான்” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் கூறி வருவதற்கு பதிலாக கலாநிதி மாறனின் இந்த பதில் அமைந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்