அண்ணாத்த திரைப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்பட, ஜெயிலர். வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. அதற்குக் காரணம் ரஜினிகாந்தின் வரிசையான முந்தைய தோல்வி படங்கள்தான். அதே போல படத்தை இயக்கும் நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் நடந்தது.
விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது “ஜெயிலர் படத்தை ஒரு ப்ரோமோ வீடியோவோடு வெளியிட்டோம். அதன் பிறகு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதனால் விநியோகஸ்தர்கள் இயக்குனர் நெல்சனை மாற்ற சொன்னார்கள். ஆனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. படம் பாக்ஸ் ஆபீஸில் நல்லாவே போகிறது என சன் டிவி தரப்பிலிருந்து நம்பிக்கை கொடுத்தார்கள்” என பேசியுள்ளார்.