‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

Mahendran

திங்கள், 6 ஜனவரி 2025 (17:33 IST)
அஜித் நடித்த விடாமுயற்சி என்ற திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த படம் வெளியிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இம்மாத இறுதியில் விடாமுயற்சி வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அஜித் நடித்த இன்னொரு திரைப்படமான குட் பேட் அக்லி'  என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த முறையில், அஜித் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியையும் முடித்து விட்டார். மேலும், அவர் இன்று துபாய்க்கு ரேசில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய குடும்பத்தினரிடம் விடைபெற்று சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி'  படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழ் புத்தாண்டு திருநாளாக அந்த படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்