ஜெயிலர் ஹிட்டுக்குப் பிறகு டோலிவுட்டுக்கு செல்லும் நெல்சன்… ஹீரோ இவரா?

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:21 IST)
சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக நான்கே படங்களில் உயர்ந்துள்ளார் நெல்சன். அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து அவரின் அடுத்த படம் எந்த ஹீரோவுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்